நான் ஒரு வெற்றிநாயகி வரிசையில் இல்லை – ராதிகா ஆப்தே !

கோலிவுட், பாலிவுட் தாண்டி ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் போதிலும் தான் நினைத்தபடி இன்னும் வெற்றி எட்டவில்லை என தனது ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-  நான் நடித்திருக்கும் 'தி வெட்டிங் கெஸ்ட்' படம் சமீபத்தில் அமெரிக்காவில் வெளியானது.இதை அடுத்து மேலும் சில ஹாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. அதற்கான ஸ்கிரிப்ட்களை படித்து வருகிறேன். புதிய படத்தில் நடிப்பது பற்றி விரைவில் முடிவு செய்வேன். இன்றுவரை நான் என்னை வெற்றி பெற்ற ஹீரோயினாக உணரவில்லை. என் மனதுக்குள் என்ன நினைத்திருக்கிறேனோ அந்த சாதனையை இன்னும் செய்ய வில்லை. அதற்கான நேரம் வரும்போதுதான் நான் வெற்றி பெற்றதாக உணர்வேன் என கூறினார்.