நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது – நடிகர் சிம்பு!

பால் அபிஷேகம் பற்றி நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என நடிகர் சிம்பு கூறி உள்ளார். நடிகர் சிம்பு சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஏதாவது ஒரு விஷயத்தை நெகட்டிவாக கூறினால்தான் போய் சேருகிறது. அதனால்தான் அண்டாவில் பால் ஊற்றுமாறு கூறினேன். எனது கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யுமாறு நான் கூறவில்லை, பாக்கெட்டுகளில் உள்ள பாலை அண்டாக்களில் ஊற்றுங்கள் என பால் அபிஷேகம் பற்றி நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. உயிரில்லாத ஒரு கட்அவுட்டுக்கு பால் ஊற்றுவதைவிட, உயிருள்ள மனிதர்களுக்கு வழங்குமாறு கூறினேன். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் கூறியதை நான் மறப்பவன் அல்ல. நல்ல விஷயத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதை தவறான முறையில் கூறியதாக நீங்கள் கருதினால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் கூறுவதை சர்ச்சையாக ஆக்க சிலர் முயற்சிக்கின்றனர் என கூறியுள்ளார்.