நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன் – ஓவியா !

களவாணி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஓவியா, ‘‘களவாணி, என் மனதுக்கு நெருக்கமான படம் என்றும் மேலும், ஹெலன் என்ற என் சொந்த பெயரை மாற்றி, ஓவியா என்று தனக்கு பெயர் சூட்டியவர் இயக்குனர் சற்குணம் தான் என்றும் முதல் பாகத்தில் நடித்தவர்கள் அத்தனை பேரையும் இந்த படத்தில் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய ஓவியா விமல், என் நெருங்கிய நண்பர். அவர்தான் எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தார். ‘களவாணி’ அளவுக்கு இந்த படமும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் திருமணம் செய்துகொள்வது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓவியா, நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன், கடைசி வரை நடித்துக் கொண்டிருந்தால் போதும் என்று கூறிய அவர் திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என்று ஓவியா தெரிவித்துள்ளார்.