Cine Bits
நாய்க்கு கிடைத்த அதிர்ஷ்டம்….
ரஜினிகாந்த் “காலா” படத்தில் தாதாவாக நடித்ததால் அவருடன் படம் முழுவதும் மணி என்ற நாய் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும்போது 30 நாய்களை வரவைத்து அதில் மணி என்ற நாயை தேர்வு செய்தனர். அதற்கு சிறப்பு பயிற்சிகள் வழக்கப்பட்டடுள்ளது. இந்த படத்தில் அவருடன் நாய் நடித்ததால், அதனை வெளிநாட்டு ரசிகர்கள் வாங்குவதற்கு 2 கோடி வரை விலை பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நாய் சாதாரண நாட்டு வகையை சேர்ந்தது. நாய் நடித்த காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்தனர். தற்போது அந்த நாய்க்கு 4 படங்கள் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.