நாளை அண்ணாதுரை படத்தின் ஆடியோ விழா

பிச்சைக்காரனுக்குப் பிறகு விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் படத்தின் ஆடியோ விழாவின்போது அந்த படம் சம்பந்தப்பட்ட 10 நிமிட காட்சிகளை திரையிட்ட  நிலையில்,  நவம்பர் 15-ந்தேதி வெளியாகும் அண்ணாதுரை படத்தின் ஆடியோ விழாவின்போதும் பத்து நிமிட படக்காட்சிகளை மீடியாக்களுக்கு திரையிட்டு காண்பிக்க உள்ளார் விஜய் ஆண்டனி. தெலுங்கிலும் இதேப்போன்று 10 நிமிட காட்சிகள் திரையிடப்பட உள்ளதாம்.படம் நவம்பர் 30 ம் தேதி வெளியிடப்படும்.