நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது காற்று வெளியிடை

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. மாறுபட்ட வேடத்தில் கார்த்தி நடிக்க நாயகியாக அதிதிராவ் நடித்திருக்கிறார். ஏ.ஆர். ரகுமான் இசையில் தயாரான பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களின் விருப்ப பாடலாக வலம் வருகிறது.

இந்நிலையில், இந்த படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைத்துள்ளது. இந்த செய்தி படக்குழுவினர்களுக்கு மட்டுமின்றி விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

மணிரத்னத்தின் முந்தைய படமான ஓ காதல் கண்மணி படத்தை போல் இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறுவதோடு பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.