நாளை விஐபி-2 டீசர் வெளியீடு!

விஐபி-2 படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. ஜூலை 28-ந்தேதி படம் திரைக்கு வருகிறது. முன்னதாக, விஐபி-2 படத்தின் டீசர் நாளை தமிழ்-தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது. இந்த தகவலை தனுஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து விஐபி-2 டீசரை டிரண்டிங் செய்ய தனுஷின் ரசிகர்கள் இப்போதே ஆயத்தமாகி விட்டனர்.