நிஜத்திலும் ராஜா ராணி ஆல்யா – சஞ்சீவ் கார்த்திக் ஜோடி!

தனியார் தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருவது ராஜா ராணி தொடர். கடந்த 2017ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த தொடரில் சஞ்சீவ் மற்றும் ஆல்ய மானஸா ஆகிய இருவரும் தான் மிகவும் பிரபலம். இந்த தொடரின் மூலம், இவர்களுக்கு மிகவும் பிரபலமான சீரியல் ஜோடிகள் என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான விஜய் டிவி விருது வாங்கிய சந்தோஷத்தோடு, சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா ஜோடி திருமண நிச்சயம் செய்து கொண்டனர்.