Cine Bits
நிஜத்தில் சண்டை போட்டது தெரியாமல் எங்களின் நடிப்பை பார்த்து அசந்த இயக்குநர் – வைபவ் !
வெங்கட் பிரபுவும், வைபவும் ரொம்ப நெருக்கமானவர்கள் என்று தான் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து வைபவ் கூறியிருப்பதாவது, இந்த படத்தில் நானும், வெங்கட் பிரபுவும் போலீஸாக நடிக்கிறோம். எங்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடக்கும். அண்மையில் எங்களுக்கு இடையே நடந்த பிரச்சனையால் படத்தில் மோதுவது போன்று நடிப்பது மிகவும் எளிதாக இருந்தது. எனக்கும், வெங்கட் பிரபுவுக்கும் இடையேயான ஈகோ மோதல்கள் படத்தில் முக்கியமானது. நாங்கள் நிஜத்தில் சண்டை போட்டது தெரியாமல் ரீலில் எங்களின் நடிப்பை பார்த்து இயக்குநர் அசந்துவிட்டார்.