Cine Bits
நிவின்பாலி படம் மோகன்லால் படமாக மாறுகிறதா?
நிவின்பாலி “ஹே ஜூடு” படத்தை தொடர்ந்து “காயங்குளம் கொச்சுன்னி” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து 36 வயதினிலே புகழ் ரோஷன் ஆண்ட்ருஸ் இயக்கும் இந்த படத்தில் எண்பதுகளில் வாழ்ந்த கொள்ளையனாக டைட்டில் ரோலில் நடிக்கிறார். இந்த படத்தில் மோகன்லால் இதிக்கார பக்கி என்ற கொள்ளையனாக முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதலில் இவர் கொஞ்சம் நேரம் வந்துபோகும் விருந்தாளியாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது ஆனால் தற்போதைய தகவலின் படி 40 நிமிட காட்சியில் இடம்பெறுகிறாராம். இந்த படம் நிவின்பாலி படமாக ஆரம்பித்து தற்போது மோகன்லால் படமாக மாறிவிட்டது. இந்த படம் மோகன்லால் படத்திக்கான வியாபாரமாக பேசப்பட்டு வருகிறது.