நிவேதாவின் வித்தியாசமாக போஸ்…

நடிகை நிவேதா தாமஸ் தமிழ் டிவி தொடரில் அறிமுகமாகி பின் போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம் ஆகிய படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வரவில்லை என்றாலும் தெலுங்கில் ஜென்டில்மேன், நின்னுகோரி, ஜெய் லகுசா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் முன்னணி ஹீரோயினாக இருக்கின்றார். அவர் நடிக்கும் புதிய படத்தின் தகவலை விரைவில் வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தார். நடிகைகள் பொதுவாக நாய்குட்டிகளுடன் தான்  போஸ் கொடுப்பார்கள் ஆனால் இவர் வித்தியாசமாக  தன் கழுத்தின் மீது ஒரு மலைப் பாம்பு ஒன்றை போட்டுக் கொண்டு அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதற்கு ஒரு லட்சம் பேருக்கும் மேல் லைக் செய்துள்ளனர்.