நிஹாரிகா என் தங்கச்சி போன்றவர் – விஜய் தேவரகொண்டா !

விஜய் தேவரகொண்டா சிரஞ்சீவி வீட்டு மருமகனாகப் போவதாக செய்திகள் வெளியான நேரத்தில் அவர் வேறு விதமாக பேசியுள்ளார். அர்ஜுன் ரெட்டி படம் புகழ் விஜய் தேவரகொண்டாவும், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகா கொனிடெலாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகின. திருமணம் என்று பேச்சு கிளம்பிய நேரத்தில் விஜய் தேவரகொண்டா நிஹாரிகா நடித்த சூர்யகாந்தம் பட விழாவில் கலந்து கொண்டார். படத்தை பார்த்து வெற்றி அடையச் செய்யுமாறு தனது ரசிகர்களுக்கு அவர் அன்பு கோரிக்கை விடுத்தார். அந்த நிகழ்ச்சியில் தான் அவர் நிஹாரிகா பற்றி பேசினார். நாக பாபு சார் அமெரிக்காவில் உள்ளார். வருண் தேஜ், சரண் அண்ணாவும் அமெரிக்காவில் உள்ளனர். அதனால் ஒரு அண்ணனாக நிஹாரிகா பட விழாவில் கலந்து கொண்டுள்ளேன். கீத கோவிந்தம் படத்தில் நான் நாகபாபு சாரின் மகனாக நடித்தேன். அதில் இருந்து எங்களுக்கு இடையே நெருக்கம் ஏற்பட்டது என்றார் விஜய் தேவரகொண்டா. அப்பாவுக்கு உதவியாக தயாரிப்பில் ஈடுபடுவேன் என்றார் நிஹாரிகா. இந்நிலையில் நிஹாரிகா, விஜய் திருமணம் குறித்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.