நீதா அம்பானியின் ஹேண்ட் பேக்கின் விலை – 2.6 கோடி ரூபாய்!

பிரபலங்களைப் பொறுத்தவரையில் ஹேண்டு பேக் என்பது தேவையான பொருள்களை உடன் எடுத்துச் செல்வதற்கானது மட்டுமல்ல. சமூகத்தில் அவர்களின் அந்தஸ்தை வெளிப்படுத்தும் ஒரு பொருள். அதன் காரணமாகவே பிரபலங்கள் பலரும் விலை உயர்ந்த ஹேண்ட் பேக்கை வெளியே செல்லும்போது கையில் எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவ்வளவு மதிப்பு கொண்டதாக இருப்பதற்கு அதில் பதிக்கப்பட்டிருக்கும் வைரமும் ஒரு காரணம். நீதா அம்பானி கையில் இருக்கும் அந்த ஹேண்ட் பேக்கின் பெயர் ஹிமாலயா பிர்கின் (Himalaya Birkin). அதில் 200-க்கும் மேற்பட்ட வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர 18 கேரட் தங்கமும் அதன் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது விஷயம் அதுவல்ல; அந்த ஹேண்ட் பேக் செய்யப் பயன்படுத்தப்பட்ட தோல்தான். வரி வரியாகச் சிறிய கட்டங்களுடன் இருக்கும் அந்தத் தோலுக்குச் சொந்தக்காரர் ஒரு முதலை. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 2.6 கோடி ரூபாய்.