“நீராளி” படத்தில் மோகன்லாலுக்கு ஜோடி இல்லையா?

அஜய் வர்மா இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படம் “நீராளி”. இது இரண்டு நாயகிகள் கொண்ட படம். இதில் முதல் நாயகியாக பார்வதி நாயர் ஒப்பந்தமாகிவிட்டார். இன்னொரு நாயகியாக மீரா ஜாஸ்மின் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் படக்குழுவினர் இந்த தகவலை மறுத்து, நதியா நடிக்க இருக்கிறார் என்று கூறியுள்ளனர். இந்த படத்தில் இரு நாயகிகள் இருந்தாலும், மோகன்லாலுக்கு ஜோடி யாரும் இல்லை  என்று கூறியுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிடப்பட்டுள்ளது.