நெகட்டிவ் ரோலில் தமன்னா -தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று இப்பொழுதே சேட்டிலைட் உரிமம் பெற்றுள்ளது

சிம்புவை வைத்து 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தை இயக்கினார் சுந்தர் சி, இந்தப் படம் தமிழில் சரியாக ஓடவில்லை. இந்தப் படத்துக்குப் பிறகு நடிகர் விஷாலை வைத்து சுந்தர் சி இயக்கப்போவதாக தகவல்கள் வந்தன. மேலும், இந்தப் படத்தில் ஹீரோயினாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் தமன்னா இருவரும் கமிட் ஆகியுள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க இருக்கும் இந்தப் படத்தில், தமன்னாவின் ரோல் நெகட்டிவ்வாக இருக்கும் எனத் தகவல்கள் வருகின்றனர். மேலும், படப்பிடிப்பு ஜனவரி மாதம் ஆரம்பமாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பமாகாத நிலையில், ஒரு தொலைக்காட்சி நிறுவனம், படத்தின் சேட்டிலைட் உரிமையைப் பெற்றிருக்கிறதாம். விஷால் நடிப்பில் 'அயோக்யா' படம் ரிலீஸுக்குக் காத்திருக்கிறது. நடிகை தமன்னா, நடிப்புக்கு முக்கியத்துவம்கொடுக்கும் கேரக்டரில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.