நெஞ்சம் மறப்பதில்லை ஜூன் 30ந்தேதி ரிலீஸ் ஆகுமா?

இரண்டாம் உலகம் படத்தின் தோல்விக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து செல்வராகவன் இயக்கியுள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா, அட்டகத்தி நந்திதா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் பல மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில், ஆனபோதும் படத்தை வெளியிடுவதில் தாமதம் செய்து வந்தார் படத்தை தயாரித்துள்ள இயக்குனர் கெளதம்மேனன்.
இந்நிலையில், ஜூன் 30-ந்தேதி ரிலீஸ் செய்வதாக தற்போது விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த தேதியில் நெஞ்சம் மறப்பதில்லை படம் ரிலீஸ் ஆகாது என்றொரு செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது. காரணம், தயாரிப்பு நிறுவனம் சிலருக்கு சம்பள பாக்கி கொடுக்க வேண்டியதிருக்கிறதாம். அதனால் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், ஒருவேளை, பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து விட்டால், ஜூன் 30-ந்தேதியில் திட்டமிட்டபடி நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் ஆகி விடும் என்கிறார்கள்.