நெப்போலியன் நடிக்கும் ஹாலிவுட் திகில் படம்

திருச்சி டெல் கணேசன் தயாரித்துள்ள ஹாலிவுட் படம், டெவில்ஸ் நைட். ஹாலிவுட் கலைஞர்கள் நடித்துள்ள இப்படம், ஹாலிவுட்டை தொடர்ந்து இந்தியாவிலும் ரிலீசாகிறது. படம் குறித்து டெல் கணேசன் கூறுகையில், ‘பலநூறு வருடங்களுக்கு முன்னால், செவ்விந்தியர்கள் கட்டுப்பாட்டில் அமெரிக்கா இருந்தது. பிறகு செவ்விந்தியர் களை வெள்ளையர்கள் துரத்திவிட்டு நிலங்களை அபகரித்தனர். அப்போது அகால மரணம் அடைந்த ஒரு செவ்விந்தியரின் ஆவி, மியூசியத்தில் இருக்கும் ஒரு கத்திக்குள் குடியேறுகிறது. திடீரென்று அதிலிருந்து வெளியேறுகின்ற ஆவி, ஒவ்வொருவராக பழிவாங்குகிறது. இது குறித்து போலீஸ் விசாரிக்கும்போது, அதிர்ச்சிகரமான சில சம்பவங்கள் நடக்கிறது. இதையடுத்து, அந்த மியூசியத்தின் ஒரே காப்பாளர் நெப்போலியன் உதவியுடன் ஆவி எவ்வாறு சரண்டர் ஆகிறது என்பதுதான் கதை. ஹாலிவுட் நடிகை  சலீனா கஸ்மனோ, நர்ஸ் வேடத்தில் நடிக்கிறார். அஸ்வின் கணேசன் இசை அமைத்து இருக்கிறார்’ என்றார்.