நேர்கொண்ட பார்வை இடத்தின் உரிமையை கைப்பற்றிய உதயநிதியின் ரெட் ஜெய்ன்ட் !

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. வினோத் இயக்கி இருக்கும் இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படத்தை தயாரித்துள்ளார் போனி கபூர். இப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை சென்னை, திருச்சி, சேலம் ஏரியாக்களில் உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலம் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.