நேற்று இரவே இணையத்தில் லீக்கான சூர்யாவின் ‘NGK’ படத்தின் ட்ரைலர்!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'என்.ஜி.கே' படத்தின் டீசர் இன்று வெளியானது. எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக  சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இன்று மாலை வெளியாவதாக இருந்த இந்த டீசர், நேற்று இரவே இணையத்தில் லீக் ஆனது. இந்தப் படத்தின் டீசர், காதலர் தினமான இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. படத்திற்கு தணிக்கை குழு 'U' சான்றிதழ் வழங்கியுள்ளது.