நோ என்ட்ரியின் இரண்டாம் பாகம்.

அனீஸ் இயக்க, போனி கபூர் தயாரிப்பில் கடந்த 2005 ஆண்டு வெளியான படம் நோ என்ட்ரி. இதன் இரண்டாம் பாகம் நோ என்ட்ரி மெயின் என்ட்ரி என்ற பெயரில் உருவாகிறது. இந்த படத்தில் சல்மான் நடித்த வேடத்தில் அக்ஷய் குமாரை நடக்க வைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் அவர் பிசியாக இருந்ததால் இப்படத்தில் நடிக்கவில்லை. இதனால் ரன்வீர் சிங், அர்ஜுன் கபூரை நடிக்க வைக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது. ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைத்து கன்டே படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.