Cine Bits
படத்தின் கதை மும்பையில் பயணிப்பதுபோல போஸ்டரிலும் சில குறியீடுகள் இருந்த நிலையில், இன்று காலை, படத்தின் ஷூட்டிங் மும்பையில் இனிதே ஆரம்பம் ஆனது!
ரஜினிகாந்த் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரிப்பில் தயாராக இருக்கும் படம், 'தர்பார்'. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் இன்று ஆரம்பமானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தைத் தொடர்ந்து, 'தர்பார்' படம் மூலம் ஏ.ஆர்.முருகதாஸோடு கைகோத்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். இதற்கு முன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நயன்தாரா நடித்த படம், 'கஜினி'. தவிர, 27 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், சந்தோஷ் சிவன். பேட்ட படத்தைத் தொடர்ந்து அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் கதை மும்பையில் பயணிப்பதுபோல போஸ்டரிலும் சில குறியீடுகள் இருந்த நிலையில், இன்று காலை, படத்தின் ஷூட்டிங் மும்பையில் இனிதே ஆரம்பம் ஆனது.