படத்தில் சாய் பல்லவி இருந்தால் அப்படத்தை கண்டிப்பாக பார்க்கலாம் – பிரபல நாயகி டுவிட் செய்துள்ளார்.

நடிகை சாய் பல்லவி மலையாள படத்தை தொடர்ந்து தெலுங்கில் 'Fidaa' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது. அதோடு இப்படத்தில் சாய் பல்லவியின் நடிப்பையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், Fidaa படத்தில் சாய் பல்லவி தான் எல்லாமே. நான் கண்டிப்பாக சாய் பல்லவி நடித்திருந்தால் அப்படத்தை போய் பார்க்கலாம், அழகாக நடித்திருக்கிறார் என டுவிட் செய்துள்ளார். இதற்கு சாய் பல்லவி, சமந்தாவிற்கு தனது நன்றியை தெரிவித்திருக்கிறார்.