படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்! மேடையில் கண்ணீர் விட்டு அழுத விஜய் தேவர்கொண்டா
தற்போது இளம் தலைமுறை ரசிகர்களையும், ரசிகைகளையும் அதிகம் பெற்றுள்ளவர் விஜய் தேவர்கொண்டா. தெலுங்கு சினிமாவில் தற்போது டாப் ஹீரோவாக இருக்கிறார். அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் படங்களை தொடர்ந்து கடந்த வெள்ளி கிழமை அவருக்கு டியர் காம்ரேட் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ், மலையாளம் மொழிகளிலும் படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த சக்ஸஸ் மீட் பார்ட்டியில் கலந்துகொண்டவர் மேடையில் பேசிய போது நாங்கள் விமர்சனங்களை பணிவோடு ஏற்றுக்கொள்கிறோம். சிலர் படம் நீளம் ஜாஸ்தியாக இருப்பதாக கூறினார்கள். வாழ்க்கையில் வித்தியாசம் காட்டவே அப்படி எடுக்கப்பட்டது. முதல் பாதி இரண்டாம் பாதியை விட வித்தியாசமானது. அதில் வாழ்க்கை எப்படி இருக்கிறது என காட்டப்பட்டிருக்கும். இப்படத்தில் பணியாற்றியதில் மகிழ்ச்சி. ரசிகர்கள் படத்தை விரும்பியுள்ளார்கள் என கூறி கண்கலங்கி அழுதுவிட்டார். மேலும் படத்தின் இரண்டாம் பாதியில் 15 நிமிட கால அளவிற்கு காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாம். அதுவும் விஜய்யின் நீண்ட சாலை பயணம் காட்சியாம். இதை மிகவும் அவர்கள் சிரமப்பட்டு படம் பிடித்தார்களாம்.