Cine Bits
படப்பிடிப்பிற்காக மும்பை செல்லும் சிம்பு
தற்போது சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தனது பெரும் பங்கை அளித்த நடிகர் சிம்பு, தற்போது ஜல்லிக்கட்டு பிரச்சனை முடிவுக்கு வந்ததை அடுத்து மும்பைக்கு செல்லவுள்ளார். ஆம் அவர் நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் பாடல் படப்பிடிப்பிற்காக அவர் விரைவில் படக்குழுவினர்களுடன் மும்பை செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த பாடலை அவரே எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பாடல் வாழ்க்கை தத்துவங்கள் குறித்து இருக்குமாம்.இந்த படம் சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.