படப்பிடிப்பில் காயமடைந்த விஷால்!

மூன்றாவது முறையாக விஷால் – சுந்தர்.சி கூட்டணி இணைந்துள்ளது. விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. இதில், விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இருவரும் ஏற்கெனவே கத்தி சண்டை படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு, அதனால் விஷாலின் கை மற்றும் கால்களில் அடி பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.