படப்பிடிப்பை உண்மையென கருதி சசிகுமாரை கைதி செய்ய வந்த மும்பை போலீசார் !

சசிக்குமார் நடிப்பில், ‘சலீம்’ படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கும் பெயரிடாத ஒரு படம் உருவாகி கொண்டிருக்கிறது. இந்த படத்தின்  படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. மும்பையில் ஒரு குடிசைப் பகுதியில் ரவுடிகளை துரத்தி செல்வது போன்ற காட்சிகள் படமாக்குவதற்காக படக்குழுவினர் ஆங்காங்கே கேமராக்களை வைத்து படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். ஆனால் அங்கு வசித்து வந்த மக்கள் சசிகுமார் ரவுடி துரத்துவது போல் எடுக்கப்பட்ட காட்சியை உண்மையாகவே ஒரு ரவுடியை யாரோ ஒருவர் துரத்திக் கொண்டு செல்கிறார் என அறிந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் படக்குழுவினர் அனைவரையும் சுற்றி வளைத்தனர். அப்போது படத்தின் இயக்குனரான நிர்மல்குமார் போலீசாரிடம் நாங்கள் படத்திற்காக காட்சிகள் எடுத்துக் கொண்டிருந்தோம் கேமராக்கள் மறைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் தெரியாமல் உங்களுக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக விளக்கம் தெரிவித்தார்.