படமாகும் சந்திரபாபுவின் வாழ்க்கை கதை – அவர் வேடத்தில் பிரபுதேவா?

பிரபல நகைச்சுவை நடிகர் சந்திரபாபு வாழ்க்கை படமாகிறது. சந்திரபாபு வேடத்துக்கு பிரபுதேவா பொருத்தமாக இருப்பார் என்று பேசப்படுகிறது. இந்த படத்துக்கு ‘ஜேபி தி லெஜண்ட் ஆப் சந்திரபாபு’ என்று பெயரிட்டுள்ளனர். கே.ராஜேஷ்வர் டைரக்டு செய்கிறார், இவர் சீவலப்பேரி பாண்டி, அமரன், கோவில்பட்டி வீரலட்சுமி ஆகிய படங்களை இயக்கியவர்.சந்திரபாபு வேடத்துக்கு நடிகர் தேர்வு நடக்கிறது. அவருக்கு நடனம் நன்றாக வரும் என்பதால் பிரபுதேவா பொருத்தமாக இருப்பார் என்று பேசப்படுகிறது. இதனால் அவரை அணுக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ் பட உலகில் 1950 மற்றும் 60-களில் சந்திரபாபு முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக திகழ்ந்தார். கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கினார்.வசதியாக வாழ்ந்த சந்திரபாபு, சொந்த படம் தயாரித்து சொத்துக்களை இழந்து கடனாளி ஆனார். கடைசி காலத்தில் வாடகை வீட்டில் வசித்தார். உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டார். மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி உடல் நலம் குன்றி 47-வது வயதில் மரணம் அடைந்தார்.