படம் நஷ்டமடைந்ததால் தன் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி!

மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து மொழி  ரசிகர்களாலும் கவரப்பட்டவர் நடிகை சாய் பல்லவி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் கவனம் செலுத்தி வருகிறார். சாய் பல்லவி, தமிழிலில் தனுஷ் ஜோடியாக நடித்த மாரி-2 படம் டிசம்பர் மாதம் வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை அடுத்து சூர்யாவுடன் என்ஜிகே என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஹனுராகவபுடி இயக்கத்தில் ஷர்வானத் – சாய்பல்லவி நடித்த ‘படி படி லேச்சு மனசு’ என்ற தெலுங்கு படம் சமீபத்தில் திரைக்கு வந்து ஆந்திராவில் அதிகமான தியேட்டர்களில் திரையிட்டனர். ஆனால் படத்துக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு இல்லை. இந்த படம் ரூ.22 கோடிக்கு வியாபாரமாகி ரூ.8 கோடி மட்டுமே லாபம் ஈட்டித்தந்தாக கூறப்படுகிறது. படத்தின் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. ஆனாலும்,படத்துக்கு சாய்பல்லவிக்கு பேசிய படியே சம்பளத்தில் மீதி தொகை ரூ.40 லட்சத்தை கொடுக்க தயாரிப்பாளர் முன்வந்தபோது அதை அவர் வாங்க மறுத்துவிட்டார். படம் நஷ்டமடைந்ததால் ரூ.40 லட்சத்தையும் அவர் விட்டுக்கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. மிகப்பெரிய ஆண் நடிகர்கள் கூட படம் வெளிவந்தவுடன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எனக்கென்ன என்று இருக்கும்பொழுது ஒரு நடிகையாக படத்திற்கான நஷ்டத்திலேயும் பங்கெடுத்துக்கொள்ளும் இவரை தெலுங்கு பட உலகினர் பாராட்டுகிறார்கள்.