Cine Bits
படம் பிடித்ததை விட அடம் பிடித்ததே அதிகம் – படவிழாவில் பார்த்திபன் பேச்சு!

பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் குப்பத்து ராஜா. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் வருகிற ஏப்ரல் 5-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். பார்த்திபன் பேசும் போது, எஸ் ஃபோகஸ் பெயருக்கு ஏற்ற மாதிரியே மிகவும் ஃபோகஸ் உடன் படத்தை மிக கவனமாக எடுத்திருக்கிறார்கள். இயக்குனர் ஒரு ஹிட்லர் மாதிரி, அவர் படம் பிடித்ததை விட அடம் பிடித்ததே அதிகம். அவர் நினைத்ததை செய்யட்டும் என நினைப்பவன் நான். கதை கேட்கும்போது நிறைய நல்ல கதைகளை முதல் 10 நிமிடங்களிலேயே உணர்ந்திருக்கிறேன். இதில் அந்த உணர்வு கிடைத்தது. இது வெறும் தர லோக்கல் படம் மட்டுமல்ல, தரமான லோக்கல் படம்.