படம் வெற்றிபெற நான் எந்த எல்லை வரை சென்று கடுமையாக உழைக்க தயார் – பிந்து மாதவி அதிரடி !

ஆடை படத்தில் அமலாபால் செய்த தைரியமான முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள். ஒரு சாதாரண வெகுளி பெண் கயவர்களின் பொறியில் சிக்கி தவித்து பின்னர் அவர் மேல் பாவம் ஏற்படுவதுபோல் கதைப்படுத்தாமல் படத்தின் ஆரம்பம் முதல் ஒரு தைரியான பெண்ணாக அமலாவை காண்பித்து அதன் பின் நடப்பதை சுவாரஸ்யமாகவும், பிரச்சனையை தைரியமாக எதிர்கொள்வது மாதிரியும் காண்பித்தது அருமையாக இருக்கிறது. இந்த தைரிய முயற்சிக்காக அமலாபாலை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது. இதுபோல் நிர்வாணமாக நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தாலும் நான் நடிக்க தயார். என்னை பொறுத்தவரை படம் வெற்றிபெற வேண்டும் அதற்காக நான் எந்த எல்லை வரை சென்று கடுமையாக உழைக்க தயார். அதற்கு ஏற்றார் போல் நல்ல கதையும் அமையவேண்டும் என்றார் பிந்து மாதவி.