படலாபத்தை கஜா புயலால் பாதித்த அரசு பள்ளிகளை தத்தெடுத்தார்- சபாஷ் ஆர்.ஜே.பாலாஜி!

பிரபு இயக்கியுள்ள எல்.கே.ஜி படத்தின் கதை, திரைக்கதையை ஆர்.ஜே.பாலாஜி எழுதியிருந்தார். இதில் ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்ததிருந்தனர். முழுக்க முழுக்க  அரசியலைக் கலாய்க்கும் வகையில் அமைந்து இருக்கும் இப்படத்தின் வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் வெற்றிவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர், படத்தை மக்களிடம் சரியாக கொண்டு போய் சேர்த்த ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகளுக்கு படகுழுவினர் நன்றி தெரிவித்தனர். எல்கேஜி படத்தின் மாபெரும் வெற்றி நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம். இந்த வெற்றியை கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி. இதற்கு கைமாறாக கஜா புயல் பாதித்த பகுதியில் உள்ள பத்து அரசு பள்ளிகளைத் தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முடிவு செய்துள்ளோம்' என்று ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.