படவாய்ப்புகள் இல்லாததால் வெப் சீரிஸ் பக்கம் தலைகாட்டிய பிக் பாஸ் நடிகை !

கடந்த பிக் பாஸ் சீசனில் மீரா மிதுனுக்கு அடுத்ததாக அதிகம் வெறுப்பை சம்பாதித்தவர் அபிராமி. மக்களால் பெரிதும் வெறுக்கப்பட்ட நபராகவே மாறிய அபிராமியை கொஞ்சம் மாற்றியது தல நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் தான். இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தை தவிர வேறு எந்த படத்தின் வாய்ப்பும் கையில் இல்லாததால் தற்போது வெப்சீரிஸ் பக்கம் தலைகாட்ட உள்ளார். இதனை பிரபல பாடகர் எஸ் பி சரண் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெப்சீரிஸ்ல் முக்கிய நாயகியாக நடிகை அதுல்யா நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.