படவாய்ப்புகள் குறைந்ததால் வெப் தொடருக்கு செல்லும் காஜல் அகர்வால் !

சமீபகாலமாக வெப் தொடர்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க ஆரம்பித்து உள்ளனர்.வெங்கட் பிரபு புதிதாக வெப் தொடர் ஒன்றை எடுக்கிறார். அந்த தொடரில் காஜல் அகர்வால் நடிக்கிறார். 10 தொடர்களாக வெளிவரவிருக்கிறது. நடிகர் நடிகைகள் ரசிகர்களுக்கு வித்தியாசங்கள் கொடுக்க எல்லோரும் புதிய பிளாட் பாரங்களுக்குள் வர ஆரம்பித்து உள்ளனர். பிரசன்னா வெப் தொடரில் நடித்துள்ளார். பிரியாமணி பேமிலிமேன் தொடரிலும் நித்யாமேனன் பிரீத் தொடரிலும் நடிக்கின்றனர். பாபி சின்ஹாவும் வெப் தொடரில் நடிக்கிறார். நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி தளபதி என்ற தொடரில் நடிக்கிறார்.