படவாய்ப்புக்காக என்னை அலைக்கழித்தனர் – பிரியங்கா சோப்ரா !

படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். ஹாலிவுட் பட வாய்ப்புகளும் வந்தன. அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கை குறித்து பிரியங்கா சோப்ரா வெளிப்படையாக பேசி உள்ளார். அவர் கூறியதாவது, நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் மிகவும் கஷ்டப்பட்டேன். பட வாய்ப்புக்காக அலைக்கழித்தனர். அப்போது சினிமாவில் எனக்கு யாரையும் தெரியாது. சினிமா பற்றிய புரிதலும் இல்லை. இயக்குனர்கள் என்மீது கோபப்படுவார்கள். திட்டவும் செய்வார்கள். என்னை ஒதுக்கினர். சினிமாவில் இருந்து தூக்கி எறிந்தனர். அந்த துயரமான நாட்களில் எனது தந்தை ஆதரவாக இருந்தார். தோல்விகளை நாம் எப்படி கையாள் கிறோம் என்பதில்தான் வெற்றி இருக்கிறது. என்னை நானே ஊக்கப்படுத்தி முன்னேறினேன் இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.