படவாய்ப்புக்காக தன்னை தவறாக நடக்கும்படி சொன்னார்கள் – நடிகர் புகார்!

நடிகைகள் ‘மீ டூ’வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் ஒருவரும் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார்.தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகினர் இதில் சிக்கி உள்ளனர்.  இந்த நிலையில் இந்தி நடிகர் விவேக் தஹியா பட வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்தாக குற்றம் சாட்டி உள்ளார். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது சினிமா துறையில் சகஜமாக நடக்கிறது. அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்வது அவரவர் கையில் இருக்கிறது. நான் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எனது மனசாட்சிப்படி நடந்தேன். சினிமாவில் நடிக்க வந்ததும் ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியலை கொடுத்து அவர்களை சந்திக்கும்படி சொல்வார்கள். ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் அழைப்பின் பேரில் அவரது அலுவலகத்துக்கு நான் சென்றேன். அப்போது நடிப்பு வாய்ப்புக்காக பணம் கேட்டார் நான் மறுத்துவிட்டேன். உடனே சிலரை திருப்திப்படுத்த படுக்கைக்கு செல்லுமாறு கூறினார். இதுமாதிரி கேவலமான காரியங்களை செய்து படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டேன் இவ்வாறு விவேக் தஹியா கூறியுள்ளார்.