பட்டாசு திரைப்படம்தான் எனக்கு ஒரு நல்லதொரு அடையாளம் !

2016-ல் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி நடித்து வந்த மெஹரின், நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா, பட்டாசு ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். இதில் தனுஷுடன் நடித்த பட்டாசு திரைப்படம் தான் தனக்கு ஒரு நல்ல அடையாளமாக இருந்துள்ளது என்கிறார் மெஹரின். இது தவிர தனது தாய்மொழியான பஞ்சாபி படங்களிலும் நடிக்கிறார். தான் கடந்து வந்துயை பற்றி அவர் நம்மிடையே, நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் வெற்றிபெற வேண்டுமென்பது தான் எனது ஆசை. கதாபாத்திரங்களில் முழுமையாக என்னை ஈடுபடுத்தி கொண்டு உயிரை கொடுத்து நடிக்கிறேன் ஆனாலும் சில படங்கள் தோல்வியை சந்திக்கின்றன. படங்களின் தோல்விக்கு நடிகர்கள் காரணமில்லை. அந்த கதை ரசிகர்களை கவர்ந்திழுக்க வேண்டும் இல்லையேல் எல்லாம் வீணாகிவிடும் என்கிறார் மெஹரின்.