பட அதிபர்கள் அவதூறு – நித்யா மேனன் வருத்தம் !

தமிழில் வெப்பம், காஞ்சனா-2, இருமுகன், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நித்யா மேனன். ஜெயலலிதா வாழ்க்கை படமான ‘த அயன் லேடி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார். மலையாளம், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்நிலையில் நித்யாமேனன் தயாரிப்பாளர்களை மதிப்பது இல்லை என்று தகவல்கள் பரவின. இதற்கு சமீபத்தில் நித்யமேனன் விளக்கம் தெரிவித்தார் அதில் எனது தாய்க்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இதனால் படப்பிடிப்பில் ஓய்வு கிடைக்கும்போது தனியாக ஒரு அறைக்குள் சென்று அழுவேன். எனக்கு மைக்ரேன் தலைவலியும் இருந்தது. அம்மாவை நினைத்தும், எனக்கு ஏற்பட்டுள்ள மைக்ரேன் தொல்லையாலும் அழுது கொண்டு இருந்தபோது பல தயாரிப்பாளர்கள் புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய என்னை சந்திக்க வந்தார்கள். அவர்கள் யார் என்று கூட எனக்கு தெரியாது. அவர்களை அப்புறம் சந்திக்கிறேன் என்று சொல்லி அனுப்பி விட்டேன். அது தயாரிப்பாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி விட்டது. அவர்களுடன் பேசாத காரணத்தால் நான் திமிர் பிடித்தவள் என்று வெளியில் தவறாக பரப்பி விட்டனர்