பண்டைய தத்துவங்களை கற்க ஆசைப்படும் மனீஷா கொய்ராலா !

உலகின் இந்து நாடான நேபாளத்தில் மன்னர் பரம்பரையை சேர்ந்தவர் நடிகை மனீஷா கொய்ராலா. தமிழ், ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்தவர். தமிழ் பம்பாய், இந்தியன், முதல்வன், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்தவர், தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் தயாரித்து கதை எழுதி இசையமைக்கும் '99 சாங்ஸ்' படத்தில் நடித்துவருகிறார். அவருடைய சொந்த நாடான காட்மண்டுவில் உள்ள த்ரிபுனா பல்கலைக்கழகத்தில் பண்டைய சம்ஸ்கிருத இளகிய மன்றம் ஒன்றை திறந்து வைக்கிறார். அது பற்றிய செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதோடு உபநிஷதம் மற்றும் பண்டைய தத்துவங்களை கற்க மிகவும் ஆவலாக உள்ளதாக தெரிவித்துள்ளார் மனீஷா கொய்ராலா.