பத்திரிக்கையாளர்களின் ஏமாற்றம் – இளையராஜா.

இசையமைப்பாளர் இளையராஜா நேற்று  வழக்கம் போல் திருப்பதி சென்று தரிசனம்  செய்தார். அங்கு தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு சிறப்பு தரிசன ஏற்பட்டு செய்து தீர்த்தம், பிரசாதங்கள் வழங்கினார்கள்.  இதனை  அறிந்த பத்திரிக்கையாளர்கள் அங்கு சென்று அவரிடம் ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம், வைரமுத்திவின்  ஆண்டாள்  பிரச்சனை மற்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணித்திற்கு இவர் பாடலை பாட  தடை விதிக்க பட்டது என  பல கேள்விகள்   எழுப்பினர். இதற்கு அவர் எந்த பதிலளிக்காமல் சென்றது  பத்திரிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.  இந்த முறை அவர் ஆன்மிகம் பற்றியும் பேசவில்லை என்பது அவர்களை ஆச்சர்யப்படவைத்தது.