பத்மாவத் படத்தின் நகைகளுக்கு வடநாட்டில் நல்ல வரவேற்பு…

பத்மாவத்  படம் கடும் எதிர்ப்பிற்கு பிறகு வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தில் தீபிகா படுகோனே சித்தூர் ராணி பத்மாவதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அவர் அணிந்திருந்த நகைகள் உடைகள் வடநாட்டு மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.இந்த படத்தில் அவர் 35 கிலோ எடை வரையிலான நகை புடவைகள் அணிந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.தற்போது வடநாட்டு நகை கடைகளில்  பத்மாவத் கலெக்ஷன் என்ற தனி பிரிவை தொடங்கியிருக்கிறார்கள்.இந்த நகைகளின் மாதிரி பேன்சி நகை கடைகள்,கவரிங் நகை கடைகளில் விற்கப்படுகிறது.இந்த நகைகளுக்கு தென்னிந்தியாவில் வரவேற்பு இல்லை என்று தெரிகிறது.