பரபரப்பான ஆர்,கே.நகர்

வெங்கட் பிரபு தயாரிப்பில் சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ் படத்தை அடுத்து பிளாக் டிக்கெட் கம்பெனி  தயாரிக்கும் படம்ஆ  ர் .கே.நகர்  ,இப்படத்தை  வடகறி படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்கி  வருகிறார்.  இந்த படத்தில் கதாநாயகனாக வைபோ நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக சனா அல்தாப் நடிக்கிறார்.

இப்படத்தில் அஞ்சனா, கீர்த்தி, சம்பத் ஆகியோர்  நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய போது ஆர் .கே.நகர் என்ற தலைப்பு பெரிதாக கவரவில்லை.

தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில்  உள்ள நிலையில்  ஆர்.கே. நகர் தேர்தலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த படத்தின் தலைப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற  நம்பிக்கையில்  தமிழக விநியோக உரிமையை   முரளி ராமசாமியின்  'ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் ' நிறுவனம் வாங்கியுள்ளது.