பரபரப்பை ஏற்படுத்திய ஜீவா படத்தின் பாடல் !

குக்கூ, ஜோக்கர் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் ராஜு முருகன் இயக்கி ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜிப்ஸி. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் ‘வெரி வெரி பேட்’ என்ற பாடல் படக்குழுவினரால் யூடியூபில் வெளியிடப்பட்டது. ராஜு முருகனின் வழக்கமான சிந்தனையும், அதிகாரத்துக்கு எதிரான முழக்கமாகப் பாடலாசிரியர் யுகபாரதியால் எழுதப்பட்ட வரிகளும் இருக்கும் காரணத்தினால் இணையத்தில் வெளியான சில மணிநேரத்துக்குள்ளேயே இப்பாடல் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. நிஜவாழ்வில் களப்போராளிகளாக இருக்கும் நல்லக்கண்ணு, திருமுருகன் காந்தி, வளர்மதி, முகிலன், பியூஷ் மனுஷ் உட்பட பலர் இந்த பாடலில் தோன்றுகின்றனர். அவர்களுடன் நடிகர் ஜீவா, ராஜு முருகன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் இணைந்து நடித்து இருக்கின்றனர். இந்த பாடலை ராஜவேல் நாகராஜன் இயக்கி உள்ளார்.