பரிதாபமாக உயிரிழந்த பிரபல காமெடி நடிகர்!
தமிழ் சினிமாவில் காமெடி நட்சத்திரங்களை குழந்தைகள் கூட ஞாபகம் வைத்திருக்கும். ஒரு சில காமெடி நடிகர்கள் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இன்னும் பலரின் மனதில் இருக்கிறார்கள். சிலருக்கு உடல் அமைப்பு கூட சினிமாவில் நடிக்க உதவும். அதனால் அவர்கள் இயற்கையான தோற்றத்திலேயே நடித்து சம்பாதித்திருக்கிறார்கள். அப்படியாக இயக்குனர், நடிகர் பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தர காண்டம் படத்தில் இரட்டை காமெடி நடிகர்களாக அறிமுகமானவர்கள் சகாதேவன், மகாதேவன். அதிக எடை கொண்ட இவர்களது உடல் மரபு ரீதியானது என மருத்துவர்கள் கூறியதால் எடையை குறைக்க முடியவில்லை. இருவரும் தங்களது உறவினர் முறை பெண்களை திருமணம் செய்துகொண்டு சென்னையில் சூளைமேடு பகுதியில் வசித்து வந்தார்கள். அண்ணன் சகாதேவன் உடல் எடையால் வீட்டிலேயே இருந்து வந்தவர் மாரடைப்பால் கடந்த 5 வருடங்களுக்கு முன் இறந்து போனார். அதே போல தம்பி மகாதேவனும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு ஆறாத கால் புண் காரணமாக கால் அகற்றப்படும் நிலைக்கு ஆளானார். மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் அவரின் நிலை கண்டு அருகில் வர யோசிக்க, பின் சிகிச்சை அளிக்க முன் வரவில்லையாம். இதனால் மகாதேவனும் படுக்கையிலேயே இறந்து போனார். மகாதேவனின் மகள் அன்பரசி தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.