பலரும் நடிக்க தயங்கிய வேடத்தில் ஆர்யா !

அரிமா நம்பி, நோட்டா, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவிருக்கிறார். இப்படம் இரு கதாநாயகர்களை கொண்ட கதை கரு கொண்ட படமாக உருவாகவுள்ளது. இரு கதாபாத்திரங்களில் ஒன்று நல்லவன். மற்றொருவன் கெட்டவன். இவர்களுக்கிடையே நடக்கும் மோதல் தான் படத்தின் கதை. இதில் நல்லவன் கதாபாத்திரத்துக்கு விஷால் தேர்வாகியுள்ளார். கெட்டவன் கதாபாத்திரத்துக்கு பல நடிகர்கள் பரிசீலிக்கப்பட்டனர். பலரும் இந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு தயங்கினர். இந்நிலையில் இதில் நடிக்க ஆர்யா சம்மதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு விஷாலின் இரும்புத்திரை படத்தில் வில்லனாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆர்யாவை கேட்டதற்கு மறுத்துவிட்டார். அதன்பிறகு தான் அர்ஜுன் நடித்தார். இப்படத்தின் படப்பிடிப்புகள் பிப்ரவரியில் துவங்கவிருக்கிறது. முறையான அறிவிப்பு பொங்கல் அன்று தெரிவிக்கப்படுமென தகவல் வெளியாகியுள்ளது.