பலூன் படம் சுமாரான வெற்றி.

இயக்குனர் சினிஷ்  இயக்கத்தில் கடந்த வருடம் டிசம்பர் 29 தேதி வெளியான படம் பலூன். இப்படத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம்  பெரிய வெற்றியை பெறவில்லை  என்றாலும் ஒரு சில திரையரங்குகளில்  25 வது நாளுக்கு சுமாரான வெற்றி என  விளம்பரம் படுத்தியுள்ள  இந்த பட குழுவினரின் நேர்மையை பாராட்ட வேண்டும்.  ஒரு படம் வெளியானா மறுநாளே இந்த படம் வெற்றி சூப்பர் ஹிட், சாதனை வெற்றி, பிளாக் பஸ்டர் வெற்றி என விளம்பரப்படுத்துவர்கள். படம் வெளியான முதல் நாளில் அந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து அது எப்படி பட்ட வெற்றியை அடையப்போகிறது என அப்படத்தின் தயாரிப்பாளராலும் கணிக்க முடியாது.  இருந்தாலும் தமிழ் சினிமாவில் ஓடாத படத்தையும்,வசூலாகாத படத்தையும்  கூட  சூப்பர், சாதனை வசூல் என விளம்பரப்படுவது தான் வழக்கம்.