Cine Bits
பள்ளிக்கூடம் கட்டிய காஜல் அகர்வால்
சமீபகாலமாக இளம் கதாநாயகர்களுடன் அதிகம் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். யாரோடு நடிக்கிறேன் என்பதை விட என்னமாதிரி கதாபாத்திரங்கள் தேர்வு செய்கிறேன் என்பது தான் முக்கியம். நல்ல கதை, கதாபாத்திரம் இருந்தால் எந்த நடிகர்களுடன் வேண்டுமானாலும் நடிப்பேன். சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறேன். அதற்கு என் பணத்தையே செலவிடுகிறேன். ஆந்திராவில் உள்ள அரக்கு என்ற பகுதிக்கு சென்றபோது அங்குள்ள ஆதிவாசி குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் இல்லாமல் அவதிப்படுவதை பார்த்தேன். இதனால் நன்கொடை வசூலித்து அரக்கு பகுதியில் பள்ளிக்கூடம் கட்டி கொடுத்து இருக்கிறேன். நல்ல விஷயங்களை பேசுவேன். மற்றவர்ளை பற்றி மோசமாக பேசுவதும் அப்படி பேசுபவர்களை ஊக்குவிப்பதும் தவறு. இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.