பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி இயற்கை எய்தினார்!

பர்மாவில் பிறந்தவர் சீதாலட்சுமி. பின்னர் தமிழகம் வந்து, திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்றார். சினிமாவில் மட்டுமின்றி நாடகங்களிலும்  எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இரு ஜாம்பவான்களோடும் நடித்தவர். கோலிவுட்டில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் நடித்து புகழ்பெற்றவர் சீதாலட்சுமி. தமிழில் எம்.ஜி.ஆர் நடித்த'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் நம்பியாரின் சகோதரியாக நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தனது நடிப்புத் திறமைக்காக 'தந்தை பெரியார் விருது’ பெற்றவர். மேலும், கலைமாமணி, கலைச்செல்வி உள்ளிட்ட பட்டங்களையும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிடம் இருந்து பெற்ற பெருமைக்குரியவர். நடிகை சீதாலட்சுமியின் உடல், சென்னை நெற்குன்றம் மேட்டுக்குப்பம், எம்.ஆர் பள்ளி அருகிலுள்ள அவரது மகளின் வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.