பழம்பெரும் நடிகை நாஞ்சில் நளினி காலமானார் – திரையுலகினர் இரங்கல் !

100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை நாஞ்சில் நளினி. இவர் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். நாகர்கோவிலைச் சேர்ந்த நளினி நாடகங்களில் நடித்து வந்தார் பின்னர் சொந்தமாக நாடக கம்பெனி  நடத்தினார். அரசியல் கட்சிகளின் பிரச்சார நாடகங்கள் நடத்தினார். சிவாஜி நடித்த 'எங்க ஊர் ராஜா' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு அண்ணன் ஒரு கோவில், தீர்ப்பு, தங்கப்பதக்கம் உள்பட பல படங்களில் சிவாஜியுடன் நடித்தார். ரஜினியுடன் தர்மம்யுத்தம், ஆடுபுலிஆட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் சின்னத்திரையில் மெகா தொடர்களில் நடித்துவந்தார். மந்திரவாசல், பிருந்தாவனம், சூலம் போன்றவை இவர் நடித்த முக்கியத்தொடர்கள். தனது குடும்பத்தினருடன் வேளச்சேரியில் வசித்து வரும் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.