Cine Bits
பவர் பாண்டி – 2 மூலம் மீண்டும் இயக்குனராகிறார் தனுஷ் !

தனுஷ் வெற்றி மாறன் இயக்கத்தில் ’அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். மஞ்சு வாரியர் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த படத்தை அக்டோபர் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் ’பவர் பாண்டி’ 2-ம் பாகத்தை எடுக்க தனுஷ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ’பவர் பாண்டி’ படம் 2017-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தை தனுஷ் இயக்கியதுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருந்தார். ராஜ்கிரண், ரேவதி ஆகியோரும் நடித்து இருந்தனர். தற்போது இந்த படத்தின் 2-ம் பாகத்தையும் தனுசே இயக்குவார் என்று தெரிகிறது.