பாகமதி படம் ரூ.50 கோடி வசூல்

அனுஷ்கா பாகுபலி-2 படத்தை அடுத்து ஹாரர் கதையில் உருவான பாகமதி படம் ஜனவரி 26ம் தேதி திரைக்கு வந்தது. இந்த படம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மட்டுமின்றி அமெரிக்கா என வெளிநாட்டிலும் திரையிட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் இதுவரை ரூ.50 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படத்திற்கான சக்சஸ் டூர், விஜயவாடாவில் நடைபெற்றதால் அவர் படகுழுவினருடன் சென்று வந்துள்ளார். இந்த படத்தின் வெற்றி விழா பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது.